பால் மாவின் விலையை மீண்டும் அதிரிக்க தீர்மானம்!

Prabha Praneetha
2 years ago
பால் மாவின் விலையை மீண்டும் அதிரிக்க தீர்மானம்!

எதிர்வரும் சில தினங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள விலைகள் தொடர்பில் இன்று (30) அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபரிலும் பால் மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தனர்.

அவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டாலும் கூட, உலக சந்தையின் விலை மீண்டும் அதிகரித்துள்ள காரணமாக தற்போதுள்ள விலையில் பால் மாவை வழங்க முடியாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், பால் மாவுக்கு கட்டுப்பாட்டு விலை இல்லாததால் இறக்குமதியாளர்களுக்கு பால் மாவின் விலையை அதிகரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்னும் சில தினங்களில் பால் மா இறக்குமதியாளர்கள் விலையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், கடந்த சில வாரங்களாக சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது 400 கிராம் பால் மா பெக்கெட் 480 ரூபாவுக்கும், 1 கிலோ பால் மா பெக்கெட்1,195 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.