உயிருக்கு உலை வைத்த மருந்துகள்.. 10 லட்சம் மக்கள் பலியான கொடூரம்...!!

Keerthi
2 years ago
உயிருக்கு உலை வைத்த மருந்துகள்.. 10 லட்சம் மக்கள் பலியான கொடூரம்...!!

அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களில் அளவுக்கு அதிக மருந்துகளை உட்கொண்டதால் 9.3 லட்சம் மக்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 1999 ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதால் 9 லட்சத்து 32 ஆயிரத்து 364 மக்கள் பலியானதாக தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால், முதியவர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்திருக்கிறார்கள்.

ஆனால், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய மக்கள் அதிக அளவிலான மருந்துகளை உட்கொண்டதால் அதைவிட அதிக அளவில் பலியானதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். நாட்டில் தற்போது வரை மொத்தமாக சுமார் 5 கோடியே 55 லட்சத்து 99 ஆயிரத்து 747 மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

எனினும் அவற்றையும் தாண்டும் வகையில், அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் 10 லட்சம் பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்