இன்றைய வேத வசனம் 03.01.2022

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 03.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

உங்களுக்கு திடீரென்று கோபம் வருமானால், உடனே சிலுவையை நினைத்துக்கொள்ளுங்கள். சாந்தமாய், பொறுமையாய் சிலுவை சுமந்தவரை நீங்கள் பின்பற்றுகிறீர்களல்லவா?

அப்படியும் கோபம் அடங்கவில்லையானால், கொஞ்சம் நேரம் முழங்காலில், அமைதியாய் நில்லுங்கள். கோபம் நீங்கும்படி ஜெபியுங்கள்!

அனேகர் கோபம் வந்தால், அதை நிறுத்துவதற்கு வழி தெரியாமல், அதையே சிந்தித்து, சிந்தித்து அதிகமான பாவத்திற்கு தூபம் போடுகிறார்கள்.

கோபத்தின் மூலம் வைராக்கியம் தோன்றும். தவறான சபதங்கள் - "அவன் முகத்தில் இனி முழிப்பதில்லை, இனிமேல் அவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமில்லை" என்கிற தவறான தீர்மானங்கள் உள்ளத்தில் எழும்பும்.

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; (எபேசியர் 4:26)

சவுல், தாவீதின் மேல் மிகவும் எரிச்சலடைந்தான். சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று;  (1 சாமு 18:9-10)
நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கோபத்தின் வேர் முதலாய் உங்களுக்குள் இராதபடி, கிள்ளி எறிந்து வீசிவிட்டு, ஆவியின் கனிகளைத் தரித்துக்கொள்ளுவீர்களாக! ஆமென்.

எபேசியர் 4:32
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.