நடிகர் சத்யராஜ் கொரானா தொற்றால் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் பரவி வருகின்றன. தமிழகத்திலும் தினமும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இன்று கொரோனா எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி உள்ளது.
சமீப நாட்களாக பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் திரை துறையிலும் தொற்று ஏற்பட்டு வருகிறது. பாடகர்
சோனு நிகாம், நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தி நடிகர்கள் விஷால் டட்லானி, நடிகைகள் குப்ரா சைத் மற்றும் மிதிலா பால்கர் ஆகியோருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் கொரானா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.