டாக்டர் பட்டம் பெறும் நடிகர் சிலம்பரசன்
உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது.
அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ஆம் தேதி' கவுரவ டாக்டர்' பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது.
இளைஞர்களின் கனவுகளையும், தொலைநோக்குப் பார்வையையும் கணக்கில் கொண்டு தரமான கல்வியை வழங்கி வரும் 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பலருக்கும் இது போல் 'கவுரவ டாக்டர்' பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தமிழ் சினிமா தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.