பிரான்சில் 3.5 லட்சம் கொரோனா; சுகாதார மந்திரி அதிர்ச்சி
Keerthi
2 years ago
பிரான்ஸ் நாட்டில் சமீப வாரங்களாக அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 5ந்தேதி (புதன்கிழமை) முதன்முறையாக மிக அதிக அளவாக 3.32 லட்சம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகின.
இந்நிலையில், பிரெஞ்சு செனட் சபையில் பேசிய சுகாதார மந்திரி ஒலிவியர் வெரான் கூறும்போது, பிரான்சில் இன்றைய நாள் முடிவில் 3.5 லட்சத்திற்கும் கூடுதலான கொரோனா பாதிப்புகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இது பெருந்தொற்று ஏற்பட தொடங்கிய காலத்தில் இருந்து சாதனை பதிவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.