அதிவேக நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்ட போட்டி

#SriLanka
Prathees
2 years ago
அதிவேக நெடுஞ்சாலையில் சைக்கிள்  ஓட்ட போட்டி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருணாகல் பகுதி திறப்பதற்கு முன்னதாக இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் பூரண மேற்பார்வையின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் இணைந்து மூன்று நாள் சைக்கிள் ஓட்ட போட்டியை ஏற்பாடு செய்துள்ளன.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய, நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு ஏற்ப விளையாட்டின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் இந்த சைக்கிள் ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது.

தேசிய மற்றும் சர்வதேச போட்டி விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் நடைபெறும் இந்த சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் சைக்கிள் ஓட்டுதலுக்கு ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

முப்படைகள், துறைமுக அதிகாரசபை, தெஹிவளை கல்கிசை மாநகர சபை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 30 சைக்கிள் ஓட்டுதல் கழகங்கள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன.

இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தினால் உரிமம் பெற்ற 125 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் போட்டியிட உள்ளனர்.

இந்த சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசுகளை வழங்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சர்வதேச அளவிலான சைக்கிள் ஓட்டுதலைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தப் போட்டியில், தூரம், தடம் போன்றவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, வீராங்கனைகள் தங்களது சிறந்த வேகத்தைப் பதிவுசெய்து சிறந்து விளங்குவார்கள் என விளையாட்டு ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.