சிஐடியின் 4வது மாடியில் இருந்து குதித்த பெண் மரணம் 

#Colombo
Prathees
2 years ago
சிஐடியின் 4வது மாடியில் இருந்து குதித்த பெண் மரணம் 

சுமார் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் நேற்று காலை கழிவறைக்கு சென்ற போது மலசலகூட ஜன்னல் வழியாக குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பன்னிபிட்டிய, டெம்பிள் மாவத்தையில் வசிக்கும் அப்சரா மெனிகே ராஜபக்ஷ (46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடனுக்கான போலி ஆவணங்களை அவர் தயாரித்து அந்த வங்கியில் 10, 12, 15 லட்சம் பெறப்பட்டு,  சுமார் 50,000 ரூபாவை விண்ணப்பதாரரிடம் கொடுத்து மீதி பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த மோசடிகள் தொடர்பில் அவருக்கு எதிராக 48 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் பல வருடங்களாக தலைமறைவாக இருந்ததாகவும்இ அவரது தொலைபேசி இலக்கங்கள், அடையாள அட்டைகள் போன்றவை போலியானவையாக இருந்ததால் கைது செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோசடி செய்த பணத்தைப் பயன்படுத்தி பல வருடங்களாக பல்வேறு இடங்களில் சொகுசாக வாழ்ந்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது மாடியில் இருந்து பெண் குதித்தது தொடர்பாக சிஐடியின் மூத்த எஸ்பி ஒருவரால் உள்ளக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்களை இன்று பொறுப்பேற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.