வடகொரியாவின் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட கிம் ஜாங் உன்..!!!

Keerthi
2 years ago
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட கிம் ஜாங் உன்..!!!

வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், ஏவுகணை சோதனையை நேரில் சென்று பார்வையிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியா அடிக்கடி, அணு ஆயுதங்ளை கொண்டும் செல்லும் ஏவுகணைகளை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும். இதனிடையே கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரத்தில் இருக்கக்கூடிய இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்திருந்தது.

மேலும், நேற்று வட கொரியா, ஏவுகணை பரிசோதனை செய்ததாக, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் கூறியிருக்கிறது. ஆனால், இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை, வெற்றிகரமாக முடிந்ததாக வடகொரியா இன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து, வடகொரியாவின் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலில், 1000 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை மலைப்பகுதியில் வெற்றிகரமாக முடிந்தது என்று கூறப்பட்டிருக்கிறது. அதை, அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்