மாட்டு வண்டியில் மண்ணெண்ணெய் விற்பனை!

Mayoorikka
4 years ago
மாட்டு வண்டியில் மண்ணெண்ணெய் விற்பனை!

கொழும்பின் சில பகுதிகளில் மண்ணெண்ணெய் வண்டிகளை வைத்திருந்தவர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனையை தங்களது வண்டிகளூடாக ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணமாக பெரும்பாலானவர்கள் மண்ணெண்ணெய் அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

வரிசையில் காத்திருந்து வாங்குவதை விட வீட்டுக்கருகில் வரும் மண்ணெண்ணெய் வண்டியிலிருந்து மண்ணெண்ணெய் வாங்குவது இலகுவானது என்பதால், கொழும்பில் மண்ணெண்ணெய் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4