உலகின் கடும் வெப்பமான ஆண்டாக ’2021’ பதிவு

Keerthi
3 years ago
உலகின் கடும் வெப்பமான ஆண்டாக ’2021’ பதிவு

உலகில் மிக அதிக வெப்பம் மிகுந்த ஆறாவது ஆண்டாக 2021 வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

புதிய தகவல்கள் அதற்குச் சான்றாய் அமைந்திருப்பதாக, அமெரிக்கப் பருவநிலை ஆய்வாளர்கள் கூறினர்.  

உலக மக்கள் தொகையில் சுமார் கால்வாசிப் பேர் கடந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். 

தெற்காசியா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய வட்டாரங்களில் கடந்த ஆண்டு சூரியன் சுட்டெரித்தது.  

ஆர்க்டிக்கில் மீண்டும் அதிகமான பனி உருகியது. உலக சாராசரியை விட ஆர்க்டிக், மும்மடங்கு  அதிகம் சூடாவதாக நாசா ஆய்வு நிறுவனம் கூறியது. 

காடுகளை அழித்தல், படிம எரிபொருள் பயன்பாடு போன்ற நடவடிக்கைகளைக் குறைக்காவிட்டால் நிலைமை மேலும் கடுமையாகலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்தனர். 

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெப்பம் அதிகமாக இருக்கலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!