அமெரிக்காவில் எண்ணெய்ப் பிசுபிசுப்புள்ள நாணயங்களை சம்பளத்தை வழங்கிய முதலாளி
Keerthi
3 years ago

நபர் ஒருவர் தன்னிடம் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவருக்கு எண்ணெய்ப் பிசுபிசுப்புள்ள நாணயங்களை சம்பளமாக வழங்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அண்ட்ரியாஸ் ஃப்ளாட்டன் (Andreas Flaten) என்னும் குறித்த ஊழியர் தான் இறுதியாகச் செய்த வேலைக்கான சம்பளத்தை தனது முதலாளி கொடுக்கவில்லையெ அமெரிக்க மனிதவள அமைச்சிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமுற்ற வாகனப் பழுது பார்க்கும் கடை முதலாளியான மைல்ஸ் வாக்கர் (Miles Walker), எண்ணெய்ப் பிசுபிசுப்புள்ள ஃப்ளாட்டனின் வீட்டு வாசலில் கொட்டிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊழியர் சட்டத்தை மீறியதாக, வாக்கர் மீது அமைச்சு வழக்குத் தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



