இன்ஸ்டகிராமில் சிங்கப்பூருக்கு முதல் இடம்

Prabha Praneetha
2 years ago
இன்ஸ்டகிராமில் சிங்கப்பூருக்கு முதல் இடம்

இன்ஸ்டகிராம் தளத்தில் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துகொள்ள சிங்கப்பூர் ஆகச் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. 

பிக் 7 டிராவல்’ எனும் சுற்றுலா சஞ்சிகை வெளியிட்ட பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றது. 

சிங்கப்பூரில் இருக்கும் பல இடங்கள் அழகான புகைப்படங்கள் எடுக்க சிறப்பாக இருப்பதாக அது கூறியது.  

கரையோரப் பூந்தோட்டங்களின் இயற்கை காட்சிகள், ஹாஜி லேனை அலங்கரிக்கும் கண்கவர் ஓவியங்கள், கூன் செங் சாலையில் வரிசையாகக் கட்டப்பட்ட வண்ணமிகு தரைவீடுகள் போன்ற இடங்களுக்கு வெளிநாட்டினர் விரும்பி சென்று புகைபடங்கள் எடுக்கின்றனர். 

 

அதோடு, சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் பலவிதமான கண்காட்சிகள் உலகெங்கும் உள்ள புகைப்பட ஆர்வலர்களைச் சுண்டி இழுக்கின்றன. 

தாங்கள் எடுக்கும் படங்களை இணையவாசிகள் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் அவற்றை பகிர்ந்துகொள்கின்றனர். 

பட்டியலில் பிலிப்பீன்சின் போராகை இரண்டாம் இடத்தையும் ஹவாயித் தீவின் ஒஹாவூ மூன்றாம் இடத்தையும் பிடித்தன. 

பட்டியலில் உள்ள 50 இடங்களில் பாரிஸ், இஸ்தான்புல், டப்ளின் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. 

சென்றாண்டு முதலிடத்தை ஜப்பான் கைபற்றியது. 

2019, 2020ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு அந்தச் சிறப்பு கிடைத்தது.