மீண்டும் களம் இறங்கும் மீரா ஜாஸ்மின்
தமிழ் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதல் பிசாசே காதல் பிசாசே என்று இளைஞர்களை முணுமுணுக்க வைத்த பாடலின் மூலம் அறியப்பட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
இவர் அறிமுகமான ரன் படத்தை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தாலும் தமிழில் இதுவே அவர் கடைசியாக நடித்த திரைப்படம்.
இந்நிலையில் அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் களம் இறங்கபோவதாக அறிவித்துள்ளார்.
மீரா ஜாஸ்மின் தற்போது பல தமிழ்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் விரைவில் அந்த படங்களை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகவுள்ளது.
மேலும் இயக்குனர் சத்யன் அந்திக்காட் இயக்கிய ‘மகள்’ படத்தில் நடித்துள்ளார். அவருடைய தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.