நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று..!

Keerthi
2 years ago
நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று..!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. தற்போது நடிகர் துல்கர் சல்மான் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் அறிகுறிகள் மட்டும் உள்ளன, மற்றபடி நான் நலமாக இருக்கிறேன். வீட்டில் என்னை தனிமைப்படுதிக் கொண்டுள்ளேன். 

கடந்த சில நாட்களில் படப்பிடிப்பின் போது என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்; அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை செய்யுங்கள். 

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தயவுசெய்து முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்' என்று தெரிவித்துள்ளார்.