அண்டார்டிகாவில் காலநிலை மாற்றம் காரணமாக குறைந்து வரும் பென்குயின்கள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!!

Keerthi
2 years ago
அண்டார்டிகாவில் காலநிலை மாற்றம் காரணமாக குறைந்து வரும் பென்குயின்கள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!!

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றம் காரணமாக பென்குயின்களின் இனம் குறைந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அண்டார்டிகாவில் ஜென்டூ மற்றும் அடெலி ஆகிய இரண்டு வகையான பென்குயின்கள் வாழ்கிறது. இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அங்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் கடல்நீர் உறைந்து இருக்கும் பகுதிகளின் பரப்பளவு குறைந்தது.

எனவே, குளிர்ச்சியான இடங்களில் வாழக்கூடிய அடெலி இனத்தைச் சேர்ந்த பென்குயின்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் வெப்பமான பகுதிகளில் வாழும் ஜென்டூ இனத்தைச் சேர்ந்த பென்குயின்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.