சாராவிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்கள் தொடர்பில் நீதிமன்றம்  எடுத்த தீர்மானம்

Prathees
2 years ago
சாராவிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்கள் தொடர்பில் நீதிமன்றம்  எடுத்த தீர்மானம்

சாரா ஜஸ்மினின் கீழ் ஆயுதப் பயிற்சி பெற்ற 10 பெண்களை சட்டமா அதிபரின் ஆலோசனை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே நேற்று முன்தினம் (19) உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட முகமது ஹஸ்துன் என்பவரின் மனைவியே  சாரா ஜாஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன்.

குறித்த பெண்கள் தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கும், முஸ்லிம் அரசை உருவாக்குவதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் தீவிரவாதப் பிரசங்கங்களைச் செய்வதற்கும் சத்தியம் செய்ததாகக் கூறப்படும் பத்து சந்தேக நபர்கள், ஹம்பாந்தோட்டை சித்திகுளம், கரவலநகர், காத்தான்குடி, நுவரெலியா பிளாக்பூல் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் என நீதிமன்றத்தில் தெரியவந்தது.

தீவிரவாத விரிவுரைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகளில் கலந்து கொண்ட பின்னர் சத்தியப்பிரமாணம் செய்த 25 சந்தேக நபர்கள் 16 பெண்கள் உட்பட 25 பேர் அடையாளம் காணப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட 25 சந்தேக நபர்களைத் தவிர, ஏனைய சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.