உலகின் முதன் முதலாக பெருமையுடன் உருவாக்கப்பட்ட " சைவ வயலின் "

Keerthi
2 years ago
உலகின் முதன் முதலாக பெருமையுடன் உருவாக்கப்பட்ட " சைவ வயலின் "

இங்கிலாந்தின் Malvern பிராந்தியத்தில் நீண்ட காலமாக வயலின் சாதனங்களை உருவாக்கி வரும் Padraig என்பவரே இவ்வகை சைவ வயலினை தயாரித்து அதில் வெற்றி கண்டுள்ளார். 

பொதுவாக, வயலின் இசைக்கருவிதயாரிப்பில் கூறுகளாக , விலங்குகளின் குறிப்பாக குதிரையின் ரோமம்(hair),குதிரையின்குளம்பு(hooves)மற்றும்சில விலங்குகளின் கொம்பு(horns),எலும்புகள் ( bones)ஆகியவை பயன்படுத்தி வருவது வழக்கமாகும். 

இதிலிருந்து வேறுபட்டு சைவ கூறுகள் உள்ளடங்க கூடிய வகையில், PEARS பழம் WILD BERRIES  பழம்  அத்துடன் இயற்கையான ஊற்று நீர்  ஆகியவை கொண்டு சைவ வயலின் உருவாக்கி ஓர் மாறுதலை அறிமுகம் செய்துள்ளார் இவர். வேகவைத்த PEARS பழம் வயலின் விளிம்பின் தடிப்பிற்கும் WILD BERRIES பழம் கருப்பு சாய பயன்பாட்டுக்கும் பெரிதும் உதவியுள்ளது எனக் கூறும் இவர்கள், இயற்கையான ஊற்று நீர், பசை அல்லது ஒட்டிப் பிடிக்கும் பிசின் போன்ற தன்மைக்கு தரமாக அமைந்தது என்கின்றனர் பெருமையாக.

தனது வாடிக்கையாளர் ஒரு சிலர், இந்த அற்புதமான இசைக்கருவியை , ஏன் சைவ மூலக்கூறுகள் வைத்து தயாரிக்க கூடாது என்ற கேள்வியே இந்த முயற்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்கிறார்.

மேலும் வயலின் எனும் கருவி தரும் இணையில்லா நாத சுரங்கள் தமிழர் எம் வாழ்வில் இரண்டறக் கலந்த பெருமை ஒருபுறம், சைவ உலகின் சக்தி உலகெங்கும் கலந்திட காணும் பெருமை மறுபுறம்.