விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு
இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவருடைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தார் இந்நிலையில் அவர் அடுத்ததாக சில விஷயங்களில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர்.
இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இயக்குனர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஐஸ்வர்யா அடுத்து பே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மியூஸிக் வீடியோ ஆல்பம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்குகிறார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியுள்ளார்.
தனது குழுவினருடன் அவர் ஆலோசனை செய்யும் புகைப்படத்தை இணையத்தில் அந்த நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த நிலையில், ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.