திருமணத்திற்கு பின் மார்க்கெட்டை இழந்த நஸ்ரியா..
தமிழில் தனது குறும்புத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நஸ்ரியா நசீம். இவர் தமிழில் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
இந்தப் படங்களுக்குப் பிறகு நஸ்ரியாவிற்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அதையெல்லாம் மறுத்து, தான் புகழின் உச்சியில் இருக்கும்போதே மலையாள நடிகர், பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
ஆனால் நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் இவர், தமிழிலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கல்லா கட்டி வந்தார்.
தற்போது நஸ்ரியா நசீம், புதிய அஸ்திவாரம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். அவர் தனது கணவரின் பாலிசியை பின்பற்ற உள்ளார்.
பகத் பாசிலை போலவே தமிழ் மலையாளம், மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
நஸ்ரியா தற்போது நானி நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்திற்கு “ஷால் அன்டே சுந்தரானிக்கி” என டைட்டில் வைத்துள்ளனர்.
இப்படத்தை விவேக் ஆத்ராயா என்னும் இயக்குனர் இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.