ஒரே ஒரு டீசரை வைத்து வியாபாரம் பண்ணிய அருண் விஜய்
கோவில் தொடங்கி வேல், ஆறு, சிங்கம், வேங்கை என தமிழ் சினிமாவில் தனது விறுவிறுப்பான அதிரடி ஆக்சன் படங்களால் கெத்து காட்டிய இயக்குனர் தான் இயக்குனர் ஹரி.
பெரும்பாலும் கிராமத்து கதையை அடிப்படையாக கொண்டே இவரின் படங்கள் இருக்கும். இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடும்.
பிரபல நடிகருமான அருண்விஜயை வைத்து இயக்கியுள்ள படம் தான் யானை. முந்தைய படங்களை போலவே இந்த படமும் அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மேலும் அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது.
கிட்டத்தட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி படத்தை வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி யானை படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழும், டிஜிட்டல் உரிமையை ஜி 5 நிறுவனமும் பெற்றுள்ளதாம்.
அருண் விஜய் படம் வெளியாகும் முன்பே வியாபாரமானது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இருப்பினும் யானை படம் முதலில் திரையரங்குகளில் வெளியான பின்னரே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டலில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.