பாலிவுட் சென்றதும் பழசை மறந்த மாதவன்..

Prabha Praneetha
2 years ago
பாலிவுட் சென்றதும் பழசை மறந்த மாதவன்..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இப்போதும் பெண் ரசிகைகள் மத்தியில் அவருக்கு மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கடைசியாக இவரின் நடிப்பில் மாறா என்ற படம் வெளியாகி இருந்தது. 

அதை தொடர்ந்து இவர் தற்போது தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் திரைப்படங்களில் மிகுந்த ஆர்வத்துடன் நடித்து வந்த மாதவன் தற்போது பாலிவுட் மற்றும் கோலிவுட் இரண்டிலும் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளார்.

தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதை விட வெப் சீரிஸில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபகாலமாக தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் இந்த வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனால் முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் இதில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு முக்கியமான ஒரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் அவர்களுக்கு ஒரு முழு திரைப்படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை விட சில நாட்கள் நடிக்கும் வெப்சீரிஸில் அதிக சம்பளம் கிடைக்கிறது.

இதன் காரணமாகவே நடிகர் மாதவன் இதுபோன்ற ஷார்ட் பிலிம்ஸில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் இதில் நடிப்பதால் அவரால் தன் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியும் என்றும் நினைக்கிறார். இதனால் அவர் தற்போது கைவசம் இருக்கும் திரைப் படங்களை முடித்துவிட்டு வெப் சீரிஸில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே மாதவன் நடிப்பில் இந்தியில் இரண்டு வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் தற்போது ரயில்வே மேன் என்ற ஹிந்தி வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இது தவிர அவர் டாக்குமென்டரி படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. என்னதான் குடும்பம் பெருசாக இருந்தாலும் நாலு படத்துல எடுக்கவேண்டிய காசை ஒரே வெப் சீரியலில் எடுத்துவிடலாம் என்பதும் ஒரு காரணம் தான் என்று கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!