தளபதி 66 படத்தைப் பற்றிய புதிய தகவல்..
நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார்.
தளபதி 66 படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் தில் ராஜு தளபதி 66 படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். தெலுங்கு சேனல் ஒன்றில் பேட்டியளித்த தில் ராஜு இப்படம் தனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
விஜய் ஆரம்பத்தில் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற குடும்பம் சார்ந்த படமாக தளபதி 66 படம் இருக்கும் என கூறியுள்ளார். இப்படத்தில் ஆக்ஷன், சென்டிமெண்ட், நல்ல பாடல்கள் என அனைத்தும் கலந்து இதயத்தை தொடக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தளபதி 66 படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கி வரும் தீபாவளி அல்லது அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சென்டிமென்ட் படங்கள் விஜய்க்கு கை கொடுத்தாலும் தற்போது மாஸ் ஹீரோவாக வளர்ந்து தலைவா, தெறி, துப்பாக்கி, மாஸ்டர் போன்ற மாஸ் படங்களை கொடுத்துள்ள விஜய் மீண்டும் சென்டிமெண்ட் படமாக உள்ள தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை.