தர்மசங்கடத்திற்கு ஆளான சிவகார்த்திகேயன்
பல போராட்டங்களுக்கு பிறகு ராஜமவுலியின் பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையினால் தள்ளிப்போன இப்படம் ஏற்கனவே பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 7ஆம் திகதி வெளிவருவதாக இருந்த ஆர்ஆர்ஆர், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனால் இந்த படத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வருகின்ற பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி இந்த படம் வெளிவருகிறது.
ஆர்ஆர்ஆர் பட புரோமோஷன் சென்னையிலும் நடைபெற்றது. இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ஆகிய ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டனர். அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் பங்கு பெற்றார்.
இப்பொழுது சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கும் டான் படத்தையும் பிப்ரவரி 25ஆம் தேதி அவரது பிறந்த நாள் அன்று வெளியிட முடிவு எடுத்துள்ளார். ஆக இரண்டு படங்களும் ஒரே திகதியில் வெளிவர உள்ளது.
ஆர்ஆர்ஆர் விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் இப்படி 2 படங்களும் ஒரே திகதியில் வெளி வருவது தெரிந்து இருந்தால் ஒரே மேடையில் 2 பட புரமோஷனையும் சேர்த்து முடித்துதிருப்பாரோ என்னமோ?
இது எல்லாம் தற்செயலாக நடந்த ஒன்று. இதற்கு பின்னால் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. இந்த அரசாங்கத்தின் அறிவிப்பை பொறுத்தே இந்த திகதிகள் முடிவு செய்யப்பட்டன.
இது எல்லாம் தற்செயலாக நடந்த ஒன்று. இதற்கு பின்னால் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. அரசாங்கத்தின் அறிவிப்பை பொறுத்தே இந்த தேதிகள் முடிவு செய்யப்பட்டன. இதற்கு முக்கிய காரணம் கொரோனா கட்டுக்குள் வந்தது தான்.
இதனால் சிவகார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு படங்களிலும் லைகா தலையிடுவதால் அவர்களே மொத்தமாக கல்லா கட்ட முடிவு செய்து விட்டார்கள் போல.
எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு படங்களிலும் லைகா தலையிடுவதால் அவர்களே மொத்தமாக கல்லா கட்ட முடிவு செய்து விட்டார்கள் போல.