மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் ஐவர் நாளை வரை மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Prasu
2 years ago
மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் ஐவர் நாளை வரை மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் ஐவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மற்றும் மாணவர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தென்னை அபிவிருத்திச் சபை காரை ஓட்டிச் சென்ற சாரதியும் அடங்குகின்றனர். மேலும், ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மேலும் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரில் ஒருவரான மருத்துவ மாணவர் தவிர கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராகம மருத்துவ பீட விடுதியில் வைத்து இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் குண்டர் கும்பலால் தனது மாணவர்கள் தாக்கப்பட்டதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய பீட மாணவர் நடவடிக்கை குழுவின் அழைப்பாளர் இமேஷ் சங்கீத் தெரிவித்தார். அவர்கள் வந்த வாகனங்களில் ஒன்று தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.