இலங்கையில் எதிர்பாராத வயதுப் பிரிவினர் மரணிக்கக் கூடிய அபாயம்!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் எதிர்பாராத வயதுப் பிரிவினர் மரணிக்கக் கூடிய அபாயம்!

நாட்டில் எதிர்பாராத வகையில் , எதிர்பாராத வயது பிரிவினர் மரணிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எனவே வைரஸ் பரவலுக்கு இடமளிக்காத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் போது, எதிர்பாராத வகையில், எதிர்பாராத வயது பிரிவினர் மரணிக்கக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.

அதற்காக மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாமலிருப்பது பொறுத்தமானதாக இருக்காது.

இதற்கான ஒரே தீர்வு கொவிட் தொற்று பரவுவதைத் தவிர்ப்பது மாத்திரமேயாகும். தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பை சாதாரணமாகக் கருதக் கூடாது.

எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு , தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும் தொற்றாளர் எண்ணிக்கையில் ஏற்த்தாழ்வுகள் ஏற்படலாம்.

மக்கள் ஒன்று கூடல்களின் போது தொற்று விரைவாக பரவக் கூடிய வாய்ப்பும் அதிகமாகும். எனவே இதுபோன்ற விடயங்களை தவிர்த்து பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.