இலங்கையில் குழந்தைகள் தொடர்பாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Mayoorikka
2 years ago
இலங்கையில் குழந்தைகள் தொடர்பாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 750 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை முன்பு 500 ஆக இருந்தது என்றும் அவர் கூறினார்.

லுகேமியா மற்றும் மூளைப் புற்றுநோய் ஆகியவை குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்கள் என்றும் பெரும்பாலான குழந்தை பருவ புற்றுநோய்களை முறையான மருத்துவ ஆலோசனையின் கீழ் குணப்படுத்த முடியும் என்றும் நிபுணர் கூறியுள்ளார்.

சில பெற்றோர்கள் கட்டுக்கதைகளைப் பின்பற்றி பிள்ளைகளை தவறான இடங்களுக்கு வழிநடத்திச் செல்வதாகவும், இதனால் நோயைக் குணப்படுத்தும் சந்தர்ப்பம் தவிர்க்கப்படுவதாகவும் திரு பெரேரா தெரிவித்துள்ளார்.

பிறந்த முதல் ஆறு மாதங்களில் ஏற்படும் மார்பகப் புற்றுநோயை பெருமளவில் தடுக்க முடியும் எனவும், முறையான தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயையும் தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு தின்பண்டங்கள் குழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளதாகவும், குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும் என திரு.பெரேரா தெரிவித்துள்ளார்.

பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் தான் முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.