இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பெறுவது மேலும் தாமதமாகும்!

#SriLanka #Gamini Lokuge #Fuel
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பெறுவது மேலும் தாமதமாகும்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பெறுவது மேலும் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், துறைமுகத்தில் இருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் குழாய் காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் மின்வெட்டு ஏற்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் ஆய்வு நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதேவேளை, களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திலுள்ள மூன்று மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறையால் இன்னும் செயலிழந்துள்ளன. இதன்படி 280 மெகாவாட் தேசிய மின்கட்டணத்திற்கு இழக்கப்பட்டுள்ளது.