தடுப்பூசியால் கருத்தரிப்பதில் பாதிப்பு ஏற்படுமா.? அமெரிக்க நிபுணரின் விளக்கம்.!!!

Keerthi
2 years ago
தடுப்பூசியால் கருத்தரிப்பதில் பாதிப்பு ஏற்படுமா.? அமெரிக்க நிபுணரின் விளக்கம்.!!!

அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்வது கர்ப்பம் தரிப்பதை குறைக்குமா?

என்பது தொடர்பில் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் பெண்கள் கருத்தரிப்பது குறையும் என்ற தகவல்கள் பரவி கொண்டிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவன இயக்குனரான டாக்டர் ஆன்டனி பாசி தெரிவித்திருப்பதாவது, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கர்ப்பமாவதை குறைக்கும் என்பது தவறானது.

கொரோனா தடுப்பூசியால் கருவுறுதலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தற்போதைய தரவுகள் மற்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. கர்ப்பமாவதை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.