படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பில் பிரித்தானியா அவதானம்

Mayoorikka
2 years ago
படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பில் பிரித்தானியா அவதானம்

இலங்கையில் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்  இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், இதனை கூறினார்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் ஒன்று தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடப்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.