கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலுடன் சிரமப்படும் நோயாளிகளின் நுரையீரல் சேதத்தை படமெடுக்கும் உயர் தொழில் நுட்ப கருவி:MRI SCAN

Keerthi
2 years ago
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலுடன்  சிரமப்படும் நோயாளிகளின் நுரையீரல் சேதத்தை படமெடுக்கும் உயர் தொழில் நுட்ப கருவி:MRI  SCAN

நீண்ட கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெறாமல் மூச்சு திணறலுடன் சிரமப்படும் நோயாளிகளின் நுரையீரல் சேதத்தை MRI  SCAN எனும் உயர் தொழில் நுட்ப படமெடுக்கும் கருவி வெளிப்படுத்தியுள்ளது.

மருத்துவ மனையில் தகுந்த சிகிச்சை பெற்றவர்களுக்கும், பெறாமல் நீண்ட கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டு சுவாசிப்பதிலும் மூச்சு திணறலிலும் கடும் சிரமங்களை எதிர் கொள்பவர்கள் மத்தியில் நடத்திய பரிசோதனையில் இந்த விபரம் வெளிப்பட்டுள்ளது. 

CT SCAN போன்ற கருவிகளில் தெளிவாக காட்டாத நுரையீரல் சேதத்தை MRI SCAN  உயர் தொழில் நுட்ப கருவி தெட்டத் தெளிவாக தந்துள்ளது .நுரையீரல் இரத்த ஓட்ட குழாய்கள் உள்வாங்கும் ஒட்சிசன் பரிமாற்ற தடையே இதற்கு காரணமென மருத்துவ விளக்கத்தை அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 
படத்தில் இடது பக்க நுரையீரல் , ஒரு மனிதனின் ஆரோக்கிய சாதாரண வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.