கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் உலகின் முதல் மலேரியா தடுப்பூசி கண்டுபிடிப்பு

Keerthi
2 years ago
கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் உலகின் முதல் மலேரியா தடுப்பூசி கண்டுபிடிப்பு

கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் உலகின் முதல் மலேரியா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அங்கு ஆண்டுக்கு 5 வயது வரையிலான சிறுபிள்ளைகளில் சராசரியாக 260,000 பேர் மலேரியா நோயால் இறக்கின்றனர். 

இதுவரை 100,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். 

அதற்கான முன்னோடித் திட்டம் கென்யா, கானா, மலாவி போன்ற ஆபிரிக்க நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு அதனை பிள்ளைகளுக்கும்  பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது. 

அதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் மலேரியா நோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.