பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எல்லைகளை திறந்த.. பிரபல நாடு..!!!

Keerthi
2 years ago
பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு  எல்லைகளை திறந்த.. பிரபல நாடு..!!!

பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து அவுஸ்திரேலியாவின் எல்லைகள் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு தெரிவித்துள்ளர்.

கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியாவின் எல்லைகளை மூட அந்நாட்டு பிரதமர் பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு அளித்துள்ளார். இதற்கு முன் அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டு இருந்தார. இதனால் 2 ஆண்டுகள் அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. இதுகுறித்து ஆஸ்ரேலியாவின் பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "டெல்டா, ஒமிக்கிரான் வகை கொரோனா உலக நாடுகளில் வேகமாக பரவி வந்ததால் ஆஸ்திரேலியா எல்லைகள் மூடப்பட்டிருந்த்தது. தற்போது பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பயணிகளுக்குகாக ஆஸ்ரேலியாவின் எல்லைகள் திறக்கப்பட உள்ளது.

அனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களை சில நாட்கள் சுய தனிமையில் உட்படுத்திகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்ரேலியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்ரேலியாவின் சுற்றுலா துறையின் வருமானம் 84.9 பில்லியன் டாலராக இருந்துள்ளது. அனால் இந்த இரண்டு ஆண்டுகள் எல்லை மூடப்பட்டதன் காரணமாக 41% குறைத்துள்ளது. மேலும் இந்த தடையை நீக்குவதன் மூலம் ஆஸ்ரேலியாவின் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும்" என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.