ஆசிரியர்கள் அறிந்திருக்கவேண்டிய சில ஆவணங்களும் பதிவேடுகளும்..பாகம்- 3

Prathees
2 years ago
ஆசிரியர்கள் அறிந்திருக்கவேண்டிய சில ஆவணங்களும் பதிவேடுகளும்..பாகம்- 3

7) சம்பளப் புத்தகம். 

ஆசிரியரகள் மாதாந்தம் பெறுகின்ற சம்பள விபரங்கள் இந்தப் பதிவேட்டில் குறித்து வைக்கப்படும். அவசியப்படுமிடத்து சம்பள விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தப் பதிவேட்டின் தகவல்கள் பயன்படும். 

8) சுற்றுநிருபங்கள்.

 அரசாங்க அறிவித்தல்கள் சுற்றுநிருபங்களின் ஊடாகவே வழங்கப்படுகின்றது. தொழில் சார்ந்த விடயங்கள் குறித்து பூரண அறிவினைப் பெற்றுக்கொள்வதற்காக அவ்வப்போது வௌியிடப்படுகின்ற சுற்றுநிருபங்கள் தொடர்பில் அறிந்திருப்பது அவசியமானதாகும். அவ்வாறான சுற்றுநிருபங்கள் இலத்திரணியல் வடிவில் அல்லது அச்சு வடிவில் பாதுகாத்துக்கொள்வது பயன் தருவதாக அமையும்.  

9) ஏனைய ஆவணங்கள்.

ஆசிரியர்களின் பாடவேளை சம்பந்தமாக வகுப்பறைகளில் பதிவதற்காக வைக்கப்பட்டருக்கும் பதிவேடு 

 ஒத்தசை கடமைப் பதிவேடு 

செயற்திட்டக் கோவை

 தினக் குறிப்பேடு.  

  • நேர சூசி உட்பட அன்றாடம் மேற்கொள்கின் நடவடிக்கைகளைப் பதிந்துகொள்வதற்காக தினக்குறிப்பேடு ஒன்றை பேணி வருவது அவசியமானதாகும். மேற்பார்வையின்போது அல்லது ஒழுக்காற்று விசாரணைகளின் போது சமர்ப்பிப்பதற்கு இது மிகவும் உதவியாக அமையும். 

இந்தப் பதிவேட்டில் கீழ்க் குறிப்பிடும் விடயங்களைப் பதிந்துவைக்கலாம்.

  • பாடசாலை நேரத்தில் தங்களால் மேற்கொள்ளப்டுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக குறிப்புக்கள.
  • ஆசிரியர் கலந்துரையாடல்கள், மற்றும் அசிரியர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்களை குறித்து வைக்கலாம்.  
  • ஆசிரியர் மாணவர் கலந்துரையாடல் குறித்து குறிக்கலாம்.
  • தாம் பெற்றுக்கொள்கின்ற லீவுகளைக் குறித்துக்கொள்ளலாம். 
  • பெற்றார் கூட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பதிந்துகொள்ளலாம். 
  •  பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற தண்டனை குறித்து பெற்றோரை அறிவுறுத்தியது தொடர்பான குறிப்புகள். 
  • பிள்ளைகளுக்கு பிரத்தியே செயற்பாடுகள் வழங்குகின்றபோது அது குறித்த தகவல்களையும் பிள்ளையின் முன்னேற்றம் குறித்தும் குறிக்கலாம்.
  • எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருகன்கின்ற செயற்பாடுகள் தொடர்பான குறிப்புக்களை எழுதலாம்.
  • வேறு நிறுவனங்கள் அல்லது பாடசாலைகளுக்கு வளவாளர்களாக அழைக்கப்படும் போது அது குறித்து குறிப்புக்களை எழுதிக்ககொள்ளலாம்,. 

 வீட்டில் பேணுகின்ற சுய விவரக் கோவை  

  • கல்வித் தகமைகள் தொடர்பான ஆவணங்கள, நியமனக் கடிதம், லொக் பதிவுகள், லீவு ஆவணங்கள். பதவி உயர்வு ஆவணங்கள், சம்பளப் பரிமாற்ற ஆவணங்கள், கல்வித் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களிலிருந்து கிடைக்கின்ற உத்தியோகபூர்வ கடிதங்கள்,. போட்டிப் பரீட்சைக்காக சமர்ப்பிக்கின்ற விண்ணப்பங்கள்,. போன்றவற்றை பத்திரப்படுத்தி கோவையாக பேணி வருவது சிறந்ததாகும்.

தமது சுய விவரக் கோவையின் சாரம்சக் குறிப்பு. 

  •  பல்வேறுபட்ட படிவங்களைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கம், தேசிய அடையால அட்மை விநியோகிக்கப்பட்ட திகதி,  நியமனம் கடித இலக்கம் நியமனக் கடிதத் திகதி, கடமை ஏற்ற திகதி பதிவி உயர்வு பெற்ற திகதி, சம்பள்திட்டம், சம்பளப் படிநிலை போன்ற விடயங்கள் அடிக்கடி அவசியப்படுவதுண்டு எனவே இது போன்ற விபரங்களை ஒரு சிறிய புத்தகத்தில்  (pocket book) குறித்து கைவசம் வைத்திருப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் உதவியாக அமையும். 


முற்றும்.