பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரை கெட்ட வார்த்தைகளால் தாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக

#SriLanka #Parliament
Prasu
2 years ago
பாராளுமன்றத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரை கெட்ட வார்த்தைகளால் தாக்கிய  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக

இப்போது எழுந்துள்ள நெருக்கடிகளுக்கு எதிராக   ஆளும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக  எதிர்க்கட்சியினர் பேசும் போது அவர்களை நசுக்குவதற்கு பாராளுமன்றத்தில் சிங்கள ’P*******’ மற்றும் ’ P******’ போன்ற   கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தனது உரையை ஆற்றிய போது, அவர் மீது தொடர்ச்சியாக  கெட்ட வார்த்தைப் பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் நேற்று மீண்டும் இடம்பெற்றுள்ளது.

 அந்த வார்த்தைகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என்று சில எதிர்கட்சி எம்.பி.கள் கூறியபோதிலும்  மாயாதுன்ன சிந்திக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொடர்ந்து இந்த வார்த்தைகளை பிரயோகித்து அவரை அடக்க முயன்றனர்.

அண்மைய மாதங்களில், குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இவ்வாறான  கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான முறைப்பாடுகள் அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி எம்.பி.கள் குற்றம் சுமத்தியதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் நாடாளுமன்ற சபாநாயகரிடமும் எழுப்பப்பட்டது.

அரசாங்கத்தின் தோல்விகளால் விரக்தியடைந்து சபையில் இதுபோன்ற கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும்,  நேற்றைய சம்பவமும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மீண்டும் எந்த நடவடிக்கையும்gt எடுக்கப்படாதா என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரியுள்ளனர்.