இலங்கை கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

#SriLanka #Covid 19
Nila
2 years ago
இலங்கை கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

கோவிட் தொற்றுக்குள்ளவர்களுக்கு கடுமையான நோய் இருந்தால் மாத்திரமே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என சிரேஷ்ட வைத்தியர் சரத் காமினி டி சில்வா தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நோய் நிலைமையின் போது ஓய்வெடுப்பதே பிரதான விடயமாகும். தாம் ஏனைய நாட்களில் மேற்கொள்ளும் வேலைகள், சுற்றி திரிவது போன்ற விடயங்களை தவிர்ப்பது கட்டாயமாகும்.

முடிந்தளவு திரவங்களை பருக வேண்டும். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 2 லீற்றருக்கு அதிகமாக நீர் அளவு திரவங்கள் பருக வேண்டும்.

2,3 நாட்களில் காய்ச்சல் குறைவடையும். அந்த காலப்பகுதியில் அவதானமாக இருக்க வேண்டும். அதன் பின்னரும் தொடர்ந்து கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி அல்லது உணவு உற்கொள்வதற்கு அல்லது நீர் பருகுவதற்கு கடினமாக இருந்தால் உடனடியாக அந்த சந்தர்ப்பத்தில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது கட்டாயமாகும்.

அதனை தவிர்த்து வைத்தியர்களை சந்திப்பதற்கு அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.