பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டால் பக்கவாதம் வருமாம் எச்சரிக்கை!

Keerthi
2 years ago
பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டால் பக்கவாதம் வருமாம் எச்சரிக்கை!

பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பவர்களுக்கு பாராசிட்டமால் மாத்திரையை பரிந்துரைக்கும் முன் மருத்துவர்கள் கவனமாக இருக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நாள்பட்ட வலிக்கு பாராசிட்டமால் தேவைப்படும் நபர்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தனி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எடின்பர்க் பல்கலைகழகத்தில் மருத்துவ மருந்தியல் தலைவரான பேராசிரியர் ஜேம்ஸ் டியர் இதுக்குறித்து கூறுகையில்,

"இரண்டு வாரங்களுக்கு பாராசிட்டமால் எடுப்பது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கியமான ஆபத்து காரணிகளாகும்."

உயர் இரத்த அழுத்தம் தற்போது மிகவும் பொதுவானது. பெரியவர்களில் மூவரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது மற்றும் வயதிற்கு ஏற்ப அதிகரிக்கிறது.

அதோடு பாராசிட்டமால் எடுப்பதும் தற்போது மிகவும் பொதுவானது என்பதை நாங்கள் அறிவோம்.

உயர் இரத்த அழுத்தம் உள்ள பல நோயாளிகளும் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் வருகிறார்கள். ஆகவே இந்த பாராசிட்டமால் மாத்திரை பெரிய மக்கள்தொகை விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் ஜேம்ஸ் டியர் அறிவித்துள்ளார்.

எப்போதாவது பாராசிட்டமால் எடுத்துக் கொள்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

அதாவது காய்ச்சல், தலைவலி என்று எப்போதாவது பாராசிட்டமால் எடுத்தால் எவ்வித ஆபத்தும் இல்லை.

ஆனால் நீண்ட காலமாக நாள்பட்ட வலிக்கு வழக்கமாக எடுத்து வந்தால் தான் இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இனிமேல் பாராசிட்டமால் மாத்திரையை கூட எடுக்காதீர்கள்.