எதிர்வரவிருக்கும் புத்தாண்டின் போது உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கான அறிகுறிகள்

#SriLanka #Wheat flour #Litro Gas
எதிர்வரவிருக்கும் புத்தாண்டின் போது உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கான அறிகுறிகள்

கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நீண்டகாலமாக நீடித்தால், பண்டிகைக் காலத்தில் பல உணவுப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிலர் கோதுமை மாவை இறக்குமதி செய்து தட்டுப்பாடு இருப்பதாக பாவனை செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

கோதுமை மா தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பால் மா, எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.