ஓட்டுனர்களின் உரிமம் பறிக்கப்படும். கனடா பிரதமர் கடும் எச்சரிக்கை.!!

Keerthi
2 years ago
ஓட்டுனர்களின் உரிமம் பறிக்கப்படும். கனடா பிரதமர் கடும் எச்சரிக்கை.!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ லாரி ஓட்டுனர்கள் உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்தவில்லை எனில் அவர்களின் உரிமங்கள் பறிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் எல்லை தாண்டி வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கனடா நாட்டின் எல்லைப் பகுதிகளில் லாரிகளை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், முக்கியமான பாலங்களிலும் சூழ்ந்துகொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுமார் இரண்டு வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் நாட்டின் வர்த்தகம் அதிக அளவில் பாதிப்படைந்து பொருளாதாரம் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, லாரி ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, உடனடியாக ஓட்டுனர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார். மேலும், அவர் தெரிவித்ததாவது, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோர், சட்டத்தை மீறிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.

அரசாங்கத்தை குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளி விடக்கூடாது. அரசாங்கம், கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் உங்களின் பணி, சர்வதேச பயண அனுமதி மற்றும் வாழ்க்கை சூழல் போன்றவை பாதிப்படையும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.

கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் உங்கள் அதிருப்தி எங்களுக்கு தெரிகிறது. ஆனால் ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது. எனவே உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.