இலங்கையில் திருமணம் செய்வதற்கான தகைமைகள் எவை? (Qualifications For Marriage Registration in Sri Lanka)

Prasu
2 years ago
இலங்கையில் திருமணம் செய்வதற்கான தகைமைகள் எவை? (Qualifications For Marriage Registration in Sri Lanka)

இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்கள் தொடர்பான தொடரில் தற்பொழுது திருமணத்திற்க்கான தகைமைகள்(Marriage Registration in Sri Lanka and Requirements) தொடர்பில் ஆராயப்படுகின்றது.

மக்களுக்கு தேவையான அடிப்படை சட்டங்களை இலகுவான முறையில் புரிய வைப்பதே  பதிவுகளின் நோக்கமாகும்.

சமூகமொன்றில் சட்டரீதியான உரிமைகளை அனுபவிப்பதற்கு ஆட்களை உருவாக்குவதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையாக திருமணம் இருக்கின்றது. 

திருமணத்தில் பாலியல் திருப்தி அடைதலை தாண்டி அதன் விளைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அந்தஸ்தை வழங்குதலில் இது முக்கியமானது

திருமணம் செய்யும் போது தகைமைகளை பூர்த்திசெய்யாமல் நிறைவேறிய திருமணங்கள் வெற்றானதாக கருதப்படும். 

இதன்மூலம் குழந்தைகள் சட்டரீதியான அந்தஸ்தை இழக்கின்றனர்.

பதிவில் திருமணம் நடைபெறுவதற்கு இரு தரப்பினரும் கொண்டிருக்கவேண்டிய தகைமைகள்.

1. இலங்கையில் திருமணம் தொடர்பான சட்டம்

  • இலங்கையில் பல்லின,பல மதங்களை கொண்டவர்கள் வாழ்கின்றனர். 
  • அவர்களின் கலாச்சாரத்துக்கு அமைவாக திருமண சட்டங்கள் இருக்கின்றன. 
  • அதாவது கண்டிய சிங்கள மக்களுக்கு கரையோர சிங்கள மக்களிலிருந்து வேறுபட்ட சட்டமும் முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் சார்ந்த இஸ்லாமிய சட்டமும் வட மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு தேசவழமை சட்டமும் இருப்பதுடன் எல்லோருக்கும் பொதுவான சட்டமாக பொது திருமண சட்டமும் (General Marriage Ordinance) உண்டு.
  • இந்தப்பதிவில் பொது திருமணசட்டத்தில் தேவைப்படுத்தப்படும் தகைமைகள்/தகுதிகள் என்னவென்று பார்ப்போம்.

2. பொது திருமண சட்டத்தில் தேவைப்படுத்தப்படும் தகைமைகள்

  • இலங்கையில் பொது திருமணசட்டப்படி தரப்பினர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் பின்வருவன தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  • திருமண வயது.
  • தடுக்கப்பட்ட திருமணங்கள்.
  • முதல் திருமணம் செய்திருத்தல்.
  • திருமண சம்மதம்.
  • சட்டத்தில் கூறப்பட்ட முறைகளை பின்பற்றாமல் திருமணம் பதிதல்

3. திருமணம் செய்யக்கூடிய ஆகக்குறைந்த வயதெல்லை எது?

  • ஆரம்பத்தில் இலங்கையின் பொதுத்திருமணசட்டதின் கீழ் ஆண்களுக்கு 14 வயதாகவும் பெண்களுக்கு 12 வயதாகவும் இருந்தது. 
  • 1995ம் ஆண்டில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
  • இலங்கையில் புதிதாக பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?
  • அதன்படி தற்போது ஆண்,பெண் இருவருக்குமான ஆகக்குறைந்த திருமண வயது 18 ஆகும். 
  • இருவரில் ஒருவர் 18 வயதிலும் குறைவாக இருந்து திருமணம் பதிந்தால் அது செல்லுபடியற்றதாகும்.

4. நீங்கள் யாரை திருமணம் செய்ய முடியாது?

  • பொதுவாக இரத்த உறவு தொடர்புபட்ட நபர்களுக்கிடையிலான திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 
  • பொது திருமணசட்டத்தின் கீழ் யாரெல்லாம் திருமணம் செய்யமுடியாது என பட்டியலிடுகின்றோம்.

1.

  • ஒருவர் மற்றவரின் வாரிசாக இருத்தல் – உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்த திருமணம் பதியாமல் இருந்து பின்னர் அந்த பெண்ணின் மூலம் தனக்கு பிறந்த பிள்ளையை தானே திருமணப்பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது

2.

  • ஒரு நபருக்கும் அவரின் மனைவி/கணவனை முன்னைய தாரத்தின் மகள்/மகனுடனான திருமணம்
  • உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்த திருமணம் பதியாமல் இருந்து பின்னர் அந்த பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த பிள்ளையை திருமணப்பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது.

3.

  • இரத்த வழி உறவுள்ள சகோதர சகோதரிகள் தமக்குள் திருணம் செய்ய முடியாது

4.

  • ஒரு நபருக்கும் அவரின் மகன்/மகள் , பேரன்/பேத்தி, தாய்/தந்தை, தாத்தா/பாட்டி ஆகியோரின் விதவை/தாரமிழந்தவருக்கும்(தபுதாரன்)இடையிலான திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.
  • உதாரணமாக ஒருவர் பெண்ணொருத்தியுடன் சேர்ந்து வாழ்ந்து, அந்த திருமணம் பதியாமல் இருந்து பின்னர் தனது மகன் இறந்தபின், மகனின் மனைவியை (மருமகள்) திருமண பதிவு செய்தால் அது செல்லுபடியற்றது
  • மச்சான்-மச்சாள் போன்றோருக்கிடையிலான திருமணங்கள் தடுக்கப்படவில்லை. எனினும் மருத்துவ காரணங்களின் கீழ் இவை பெரிதும் விரும்பப்படுவதில்லை.

5. 

  • முதல் திருமணம் நிலைத்திருத்தல்
  • பொதுச்சட்டம், தேசவழமை சட்டம் ,கண்டிய சட்டத்தின் கீழ் திருமணமான ஆள் ஒருவர் இரண்டாவது திருமணம் வாழ்க்கைத்துணை உயிரோடு இருக்கும் வரை/விவாகரத்து செய்யும் வரை/ முதல் திருமணம் செல்லுபடியற்றது என அறிவிக்கப்படும் பதிய முடியாது.
  • ஒருவருக்கு நன்கொடை கொடுத்த பின் அதனை மீள பெற முடியுமா?
  • இலங்கையில் உள்ள வழக்காற்று திருமண சட்டங்களை பற்றி எதிர்வரும் பதிவுகளில் தனித்தனியே விளக்குகின்றோம்.
  • மேலும் விவாகரத்து மற்றும் திருமணத்தை செல்லுபடியற்றதாக்கலுக்கும் வேறுபாடு உண்டு என நீங்கள் உணர வேண்டும். இதனை விரிவாக வேறு பதிவில் பார்க்கலாம்.