ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கும் போனிகபூர்? இயக்குனர் யார் தெரியுமா?
Nila
2 years ago
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
அதன்பின் வெளியான 169ஆவது திரைப்படத்தின் அறிவிப்பை அனைவரும் கொண்டாடி வந்தனர்.
'தலைவர் 169' என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.
169ஆவது பட அறிவிப்பின் சூடு தனிவதற்குள் 170ஆவது படம் குறித்த அறிவிப்பை பற்றி ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.
இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கியுள்ள நடிகரும், பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் இதனை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.