கர்ம யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 51.

#history #Article #Tamil People
கர்ம யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 51.

மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

 அத த்ருதீயோ அத்யாய:।

கர்மயோகம்

(வாழ்க்கையே யோகம்)

அர்ஜுன உவாச।
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந।
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ॥ 3.1

ஜனார்த்தனா ! கேசவா ! செயலைவிட ஞானம் சிறந்தது என்பது உனது கருத்தானால் பயங்கரமான செயலில் ஏன் என்னை ஏவுகிறாய் ?

வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே।
ததேகம் வத நிஷ்சித்ய யேந ஷ்ரேயோ அஹமாப்நுயாம்॥ 3.2

முரண்படுகின்ற வார்த்தைகளால் எனது அறிவை குழப்புகிறாய் போலும். எது எனக்கு நன்மை தருமோ அந்த ஒன்றை எனக்கு உறுதியாக சொல்.

ஸ்ரீபகவாநுவாச।
லோகே அஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக।
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்॥ 3.3

ஸ்ரீ பகவான் கூறினார்: பாவமற்றவனே ! இந்த உலகில் இரண்டு நெறிகளை முன்பே நான் போதித்து இருக்கிறேன். சாங்கியர்களுக்கு ஞான யோகம், யோகிகளுக்கு கர்ம யோகம்.

ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அஷ்நுதே।
ந ச ஸம்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி॥ 3.4

வெறுமனே வேலை செய்யாமல் இருப்பதால் ஒருவன் செயல்களற்ற நிலையை அடைந்து விட மாட்டான். செயல்களை விட்டுவிடுவதால் யாரும் நிறைநிலையை அடைவதில்லை.

ந ஹி கஷ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்।
கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:॥ 3.5

யாரும் ஒரு கனபொழுதும் செயலில் ஈடுபடாமல் இருப்பதில்லை, ஏனெனில் ஒவ்வொருவரும் இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களால் ஏவப்பட்டு தன்வசம் இல்லாமல் செயலில் ஈடுபடுத்தபடுகிறார்கள்.

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே॥ 3.6

யார் கர்மேந்திரியங்களை அடக்கி பொருட்களை மனத்தில் நினைத்து கொண்டிருக்கிறானோ, அந்த மூடன் கபடன் என்று சொல்லபடுகின்றான்.

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே அர்ஜுன।
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஷிஷ்யதே॥ 3.7

அர்ஜுனா ! யார் மனத்தினால் புலன்களை வசப்படுத்தி, பற்றற்றவனாக கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் செய்கின்றானோ அவன் சிறந்தவன்.

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:।
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8

அன்றாட கடமைகளை செய். ஏனெனில் வேலை செய்யாமல் இருப்பதைவிட வேலை செய்வது சிறந்தது. வேலை செய்யாமல் இருந்தால் சொந்த உடம்பை பேணுவது கூட முடியாமல் போகும்.

யஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம் கர்மபந்தந:।
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9

குந்தியின் மகனே ! செயலை வேள்வியாக செய்யவேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் இந்த உலகம் செயல்களில் கட்டுண்டு கிடக்கிறது. அதனால் பற்றற்று திறம்பட வேலை செய்.

ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:।
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோ அஸ்த்விஷ்டகாமதுக்॥ 3.10

படைப்பின் ஆரம்பத்தில் பிரம்ம தேவன் வேள்வியுடன் மனிதர்களை படைத்து, இதனால் வளம் பெறுங்கள். இது உங்களுக்கு விரும்பியதை தருவதாக இருக்கட்டும் என்று கூறினார்.

தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:।
பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரமவாப்ஸ்யத॥ 3.11

நீங்கள் வேள்வியால் தேவர்களை வழிபடுங்கள், தேவர்கள் உங்களை வளம்பெற செய்வார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து மேலான நன்மையை அடையுங்கள் என்று பிரம்மா கூறினார்.

இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:।
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:॥ 3.12

வேள்வியால் மகிழ்ந்த தேவர்கள் உங்களுக்கு விருப்பமான போகங்களை தருவார்கள். அவர்களால் தர்பட்டவற்றை அவர்களுக்கு கொடுக்காமல் யார் அனுபவிக்கிறானோ, அவன் நிச்சயமாக திருடனே.

யஜ்ஞஷிஷ்டாஷிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:।
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்॥ 3.13

வேள்வியில் எஞ்சியதை உண்பவர்கலான மேலோர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் தங்களுக்காகவே சமைக்கிறார்களோ அந்த பாவிகள் பாவத்தையே அனுபவிக்கிறார்கள்.

அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:।
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:॥ 3.14

உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. உணவு மழையிலிருந்து உண்டாகிறது. மழை வேல்வியிளிருந்து உண்டாகிறது. வேள்வி செயல்களிலிருந்து உண்டாகிறது.

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்।
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்॥ 3.15

செயல் உடம்பிலிருந்து உண்டாகிறது. உடம்பு உயிரிலிருந்து தோன்றுகிறது. எனவே எல்லோரும் வேல்வியிலேயே நிலை பெற்றுள்ளனர்.

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:।
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி॥ 3.16

அர்ஜுனா ! இவ்வாறு இயங்குகின்ற சக்கரத்தை யார் பின்பற்றவில்லையோ அவன் பாவி, புலன் வாழ்க்கை வாழ்பவன், அவனது வாழ்க்கை வீணே.

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஷ்ச மாநவ:।
ஆத்மந்யேவ ச ஸம்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே॥ 3.17

யார் ஆன்மாவில் இன்பம் காண்கிறானோ , ஆன்மாவில் மட்டும் திருப்தி உடையவனோ, ஆன்மாவில் மட்டும் மகிழ்ச்சி அடைகிறானோ அவனுக்கு எந்த கடமையும் இல்லை.

நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஷ்சந।
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஷ்சிதர்தவ்யபாஷ்ரய:॥ 3.18

அவனுக்கு இந்த உலகத்தில் செயல்களால் பயன் இல்லை. எதுவும் செய்யாததால் அவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை, எந்த நன்மைக்காகவும் அவன் யாரையும் சார்ந்திருப்பதும் இல்லை.

தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர।
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:॥ 3.19

செய்ய வேண்டிய வேலைகளை எப்போதும் பற்றற்றவனாக நன்றாக செய், ஏனெனில் பற்றற்று வேலை செய்பவன் மேலான நிலையை அடைகின்றான்.

கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:।
லோகஸம்க்ரஹமேவாபி ஸம்பஷ்யந்கர்துமர்ஹஸி॥ 3.20

ஜனகர் முதலானோர் கர்மத்தாலேயே முக்தியை அடைந்தார்கள், உலகத்தை நல்வழியில் நடத்துவதை மனதில் கொண்டு வேலை செய்ய கடமைபட்டிருக்கிறாய்.

யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:।
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே॥ 3.21

மேன்மக்கள் செய்வதையே மற்ற மனிதர்கள் செய்கின்றனர். அவர்கள் எதை அடிப்படையாக கொள்கிறார்களோ அதையே உலகம் பின்பற்றுகிறது.

ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிம்சந।
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி॥ 3.22

அர்ஜுனா ! மூன்று உலகங்களிலும் கடமை என்று எனக்கு எதுவும் இல்லை. நான் அடைய வேண்டியதும் எதுவும் இல்லை. எனினும் நான் தொடர்ந்து வேலையில் ஈடுபடுகிறேன்.

யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:।
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 3.23

அர்ஜுனா ! நான் ஓய்வின்றி எப்போதும் வேலையில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் நிச்சயமாக என்னுடைய வழியையே பின்பற்றுவார்கள்.

உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்।
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:॥ 3.24

நான் வேலை செய்யாவிட்டால் இந்த உலகங்கள் அழிந்து விடும். ஜாதி கலப்பிற்கும் நான் காரணம் ஆவேன். மக்களை கெடுத்தவனும் ஆவேன்.

ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத।
குர்யாத்வித்வாம்ஸ்ததா அஸக்தஷ்சிகீர்ஷுர்லோகஸம்க்ரஹம்॥ 3.25

பரத குலத்தில் உதித்தவனே ! பாமரர்கள் எப்படி பற்று வைத்து வேலை செய்வார்களோ, அப்படி அறிவாளி, பற்றற்றவனாக உலக நன்மைக்காக வேலை செய்யவேண்டும்.

ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்।
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்॥ 3.26

பற்றுடன் வேலை செய்கின்ற பாமரர்களை அறிவாளி குழப்பக்கூடாது. தான் எல்லா வேலைகளையும் ஈடுபாட்டுடன் நன்றாக செய்து கொண்டு அவ்வாறு செய்வதற்கு பிறரையும் தூண்டவேண்டும்.

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஷ:।
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥ 3.27

செயல்கள் எப்போதும் இயற்கையின் குனங்கலாலேயே செய்யபடுகிறது. அகங்காரத்தால் குழம்பியவன் “செய்பவன் நானே “ என்று நினைக்கின்றான்.

தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:।
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே॥ 3.28

பெருந்தோள் உடையவனே ! குணம் மற்றும் கர்மங்களுடைய பிரிவிகளின் உண்மையை அறிந்தவன், குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன என்று உணர்த்து பற்றின்றி வேலை செய்கிறான்.

ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு।
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்॥ 3.29

இயற்கையின் குணங்களால் குழப்பம் அடைந்தவர்கள் குணங்களின் செயல்பாடுகளில் பற்று வைக்கிறார்கள்.அறிவு தெளிவற்ற அந்த மந்த புத்தியினரை அறிவாளிகள் கலங்குமாறு செய்யகூடாது.

மயி ஸர்வாணி கர்மாணி ஸம்ந்யஸ்யாத்யாத்மசேதஸா।
நிராஷீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:॥ 3.30

எல்லா வேலைகளையும் என்னிடம் சமர்பித்துவிட்டு, ஆசையிள்ளாதவனாக, அகங்காரம் அற்றவனாக, மனகிளர்ச்சி நீங்கியவனாக தன்னுனர்வுடன் போரில் ஈடுபடு.

யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:।
ஷ்ரத்தாவந்தோ அநஸூயந்தோ முச்யந்தே தே அபி கர்மபி:॥ 3.31

யார் இந்த எனது கருத்தை நம்பிக்கையுடனும், அற்பமான ஆட்சேபனைகளை எழுப்பாமலும் தொடர்ந்து பின்பற்றுகிறார்களோ அவர்கள் செயல்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்।
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:॥ 3.32

யார் இந்த எனது கருத்தை இகழ்ந்து பேசி பின்பற்றாமல் இருக்கிறார்களோ, எல்லா விதத்திலும் முட்டாள்களான, விவேகம் அற்றவர்களான அவர்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் என்று அறிந்துகொள்.

ஸத்ருஷம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி।
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி॥ 3.33

அறிவாளியும் தன் மனபோக்கிற்கு ஏற்பவே செயல்படுகிறான். மனிதர்கள் தங்கள் மனஇயல்பையே பின்பற்றுகின்றனர். அடக்குவது என்ன செய்யும் ?

இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ।
தயோர்ந வஷமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ॥ 3.34

பொருட்களில் விருப்பும் வெறுப்பும் கொல்வது புலன்களின் இயல்பு. யாரும் அவற்றிக்கு வசப்பட கூடாது. ஏனெனில் அவை மனிதனின் எதிரிகள்.

ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வதர்மே நிதநம் ஷ்ரேய: பரதர்மோ பயாவஹ:॥ 3.35

பிறருடைய தர்மத்தை நன்றாக செய்வதை விட, நிறைவில்லாததாக இருந்தாலும் சொந்த தர்மத்தை பின்பற்றுவது சிறப்பானது. சொந்த தர்மத்தை பின்பற்றி மரணத்தை தழுவுவதுகூட சிறப்பானதே. ஏனெனில் பிறருடைய தர்மம் பயம் நிறைந்தது.

அர்ஜுன உவாச।
அத கேந ப்ரயுக்தோ அயம் பாபம் சரதி பூருஷ:।
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:॥ 3.36

அர்ஜுனன் கேட்டது : விருஷ்ணி குலத்தில் உதித்தவனே ! விருப்பம் இல்லாவிட்டாலும் பலவந்தமாக ஏவப்பட்டவனைபோல் எதனால் தூண்டப்பட்டு மனிதன் பாவம் செய்கிறான்.

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:।
மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்॥ 3.37

ஸ்ரீ பகவான் கூறினார்: ரஜோ குணத்திலிருந்து உதிப்பதும், எல்லாவற்றையும் விழுங்குவதும், பெரும் பாவம் நிறைந்ததுமான ஆசையும் கோபமும் தான் எதிரிகள் என்று அறிந்துகொள்.

தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஷோ மலேந ச।
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்॥ 3.38

எப்படி நெருப்பு புகையாலும், கண்ணாடி அழுக்கினாலும், கரு கருப்பையினாலும் மூடப்பட்டு இருக்கிறதோ, அப்படியே அறிவு ஆசையில் மூடப்பட்டு இருக்கிறது.

ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா।
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச॥ 3.39

குந்தியின் மகனே ! அடைய முடியாதவற்றை நாடுவதும், நிறைவு செய்ய முடியாததும், அறிவாளிக்கு நிரந்தர எதிரியானதும், வேண்டிய வடிவெடுப்பதுமாகிய இந்த ஆசை அறிவை மறைக்கிறது.

இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே।
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்॥ 3.40

புலன்களும் மனமும் சங்கல்பமும்( will ) ஆசையின் இருப்பிடம் என்று சொல்லபடுகிறது. ஆசை இவற்றால் உண்மையறிவை மறைத்து மனிதனை மயக்குகிறது.

தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப।
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஷநம்॥ 3.41

பரத வீரனே ! முதலில் புலன்களை வசபடுத்தி, அறிவையும் விவேகத்தையும் அழிப்பதும் பாவத்தின் வடிவமானதுமாகிய இந்த ஆசையை உறுதியாக வென்றுவிடு.

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥ 3.42

புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை என்று சொல்கிறார்கள் . ஆனால் புலன்களை விட மனம் ஆற்றல் வாய்ந்தது. மனத்தைவிட புத்தி ஆற்றல் வாய்ந்தது. புத்தியைவிட ஆற்றல் வாய்ந்தது ஆன்மா.

ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா।
ஜஹி ஷத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்॥ 3.43

தோள்வலிமை படைத்தவனே ! புத்தியை விட மேலான ஆன்மாவை அறிந்து, வெல்வதற்கு கடினமானதும் ஆசை வடிவானதுமாகிய எதிரியை ஆன்மாவினால் அடக்கி வென்றுவிடு.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
கர்மயோகோ நாம த்ருதீயோ அத்யாய:॥ 3 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'கர்மயோகம்' எனப் பெயர் படைத்த மூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

விளக்கம்:

இந்த உலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து செயல்களும் இயற்கையால் செய்யபடுகிறது. இதற்கு காரணம் இறைவன் இல்லை. அதனால் அனைத்து செயல்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்களின் விளைவு மீது ஆசை வைக்காமல் அதை கடமையாக செய்ய வேண்டும்.

நெருப்பு மிகவும் பிரகாசமானது ஆனால் நெருப்பை சுற்றி எப்போதும் சாம்பலும் புகையும் சூழ்ந்திருப்பதால் நெருப்பின் பிரகாசம் சரியாக தெரியாமல் மங்கலாக தெரிகிறது. அதை போலவே மிகவும் சக்தி வாய்ந்தது நமது புத்தி. ஆனால் ஆசை, காமம், கோபம் போன்றவை சூழ்ந்திருக்கின்றன. அதனால் புத்தி மந்தமாகி விடுகிறது.

சக்தியை இழந்து விடுகிறது. சக்தி வாய்ந்த திடமான மனத்தை கொண்டு இந்த ஆசை கோபம் காமம் இவற்றை வெட்டி ஏறிய வேண்டும். அப்போது தான் புத்தி உண்மையை அறிந்து அது தர்மத்தின் வழியில் செயல்பட தொடங்கும். உண்மையை சரியாக உள்ளது உள்ளபடி அறிந்தவனுக்கு எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பது தெளிவாக விளங்கும்.

அவன் நல்வழியில் சென்று விரைவாக இறைவனை அடைவான். மனித உடலின் உறுப்புகள் ( கை, கால், வாய், மூக்கு, கண் ) போன்றவை புலன்கள் என்று அழைக்கபடுகிறது. இந்த புலன்கள் சக்தி வாய்ந்தவை. இவற்றை விட சக்தி வாய்ந்தது மனிதனின் மனம். மனிதனின் மனத்தை விட சக்தி வாய்ந்தது புத்தி. புத்தியை விட சக்தி வாய்ந்தது தனது இதயத்தில் இருக்கும் ஆன்மா. இறைவன் அனைத்து உயிரினத்தின் இதயத்திலும் ஆன்மாவாக இருக்கிறார். இந்த ஆன்மாவை தனது சுத்தமான புத்தியால் காண முயல வேண்டும்.

தொடரும்...