நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் தெரியுமா?ரகசியத்தை போட்டுடைத்த சமந்தா
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த வருடம் அக்டோபரில் விவகாரத்தை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சிகொடுத்தனர். நான்கு வருடம் திருமண வாழ்க்கையை அவர்கள் திடீரென உதறியது சினிமா துறையினருக்கே கடும் அதிர்ச்சியாக இருந்தது.
இதற்கு முன்பு ஒரு பேட்டியில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் திருமணத்திற்கு முன்பே லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது தெரியவந்தது. பிரபல தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு தான் அந்த பேட்டியை எடுத்திருந்தார்.
அதே பேட்டியில் நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்பதையும் சமந்தா போட்டுடைத்தார். “அவருக்கு PILLOW தான் முதல் மனைவி. அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் அந்த தலையணை நடுவில் இருக்கும்” என சமந்தா கூறி இருக்கிறார்.
காதலித்து, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அதன் பிறகு இணைபிரியாத ஜோடியாக கடந்த நான்கு வருடங்களாக இருந்த அவர்களா இப்படி விவாகரத்து முடிவு எடுத்தது என தற்போதும் அந்த பேட்டியை பார்த்தால் நமக்கு தோன்றும்.
விவாகரத்து செய்ய என்ன காரணம் என அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், நாக சைதன்யா ‘அவருக்கு விவாகரத்து மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சி’ என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.