நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்

டீசலைப் பெறுவதற்காக நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சுற்றி சுமார் இரண்டு கிலோமீற்றர் வரை வாகனங்கள் வரிசையில் நின்றன.
அவர்கள் அனைவருக்கும் பெட்ரோல் நிலையத்தில் போதுமான டீசல் இல்லைஇ நூற்றுக்கணக்கான வாகனங்களுக்கு டீசல் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் சாரதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேசத்திற்கு வெளியில் இருந்து வரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் டீசல் வரிசையில் நின்றிருந்ததோடு, தமது ஊர்களுக்குச் செல்வதற்கு போதியளவு டீசல் வாகனங்களில் இல்லை எனத் தெரிவித்தனர்.
நேற்றும் சிலருக்கு டீசல் கிடைக்கவில்லை. அதன்படி இன்றும் பெருந்தொகையை செலுத்தி நுவரெலியாவில் தங்கியிருக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.
டீசல் பற்றாக்குறையால் காய்கறிகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



