உக்ரைன் வாழ் இலங்கையர்களின் நிலை தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
Lanka4
2 years ago
உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரியவந்துள்ளது.
துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நிலைமையை கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 14 மாணவர்கள் உட்பட 70 இலங்கையர்கள் உள்ளனர் எட்டுமாணவர்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டனர் ஏனையவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கான வேண்டுகோள்களை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தனது வான்வெளியை மூடியுள்ளதால் நாங்கள் எடுக்ககூடிய அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்துவருகின்றோம்,ஆனால் அனைத்து இலங்கையர்களுடனும் தொடர்பில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.