பேராதனை பல்கலைக்கழகத்திற்கு மகளின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற தந்தை விபத்தில் உயிரிழப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தின் போது வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் பயணித்த மோட்டார் வாகனம் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட 29 வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, விபத்தில் மோட்டார் வாகன சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அவரது தந்தையே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தனது 29 வயதுடைய மகளின் மருத்துவ பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.