ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்
தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ரூபாவாஹினியின் சின்னத்தில் (Logo) இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
தற்போது ‘ரூபவாஹினி’ என எழுதப்பட்ட சிங்கள எழுத்துக்கள் மட்டுமே, குறித்த சின்னத்தில் அமையப்பெற்றுள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கீழ், ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசை இயங்கி வருகின்றது. மேற்படி கூட்டுத்தாபனமானது பொது நிதியில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் 40 வருடங்களின் பின்னர் நீக்கப்பட்டுள்ளமை குறித்து பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அரசின் தேசிய தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த த மிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளமையானது, தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.