அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 26.02.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் 26.02.2022

மேஷம்:

அசுவினி: குழந்தைகளால் அலைச்சல் இருக்கும். பணிச்சுமை கூடும்.
பரணி: கோபதாபங்கள் தீரும் நாள். மருத்துவ செலவுகள் குறையும்.
கார்த்திகை 1: அரசாங்க வகையில் நன்மை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: கூடுதல் முயற்சியால் நினைத்த விஷயத்தை முடிப்பீர்கள்.
ரோகிணி: நெருங்கிய ஒருவர் பற்றிய அநாவசிய பயம் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தை விரிவாக்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உறவுகளுடன் ஏற்பட்ட வருத்தங்கள் இன்று முடிவுக்கு வரும்.
திருவாதிரை: திருமண விஷயமாக நல்ல செய்தி உண்டு.
புனர்பூசம் 1,2,3: மனக்குழப்பம் தீரும் நாள். வீண் செலவுகள் குறையும்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்களின் திட்டம் ஒன்று வெற்றி பெறும். பணவரவு கூடும்.
பூசம்: யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லது.
ஆயில்யம்: தந்தையின் உடல்நலம் மேம்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்:

மகம்: எவ்வளவு பிரச்னை இருந்தாலும் மத்யஸ்தத்துக்கு அனுமதிக்க வேண்டாம்.
பூரம்: தைரியம் கூடும் நாள். எதிலும் கவனமாக இருக்கவும்.
உத்திரம் 1: நண்பர்களுடன் பொழுது போக்கான இடத்துககு செல்வீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: அரசாங்க விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
அஸ்தம்: குழந்தைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள்.
சித்திரை 1,2: கலைத்துறையினருக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: வியாபாரிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும்.
சுவாதி: பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பதற்றம் குறையும்.
விசாகம் 1,2,3: உங்களது முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: எதிர்பார்த்த உதவி சிறு தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும்.
அனுஷம்: புகழ் மிக்கவர் ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார்.
கேட்டை: யோகமான நாள். பொருளாதார நிலை மேம்படும்.

தனுசு:

மூலம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள்.
பூராடம்: வாழ்வில் முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் 1: தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.
திருவோணம்: பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.
அவிட்டம் 1,2: மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வர்.

கும்பம்:

அவிட்டம் 3,4: எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
சதயம்: தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க சற்றுத் தாமதமாகும்.

மீனம்:

பூரட்டாதி 4: நீங்கள் நம்பிய விஷயம் நடைபெறும் நாள். உழைப்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: வெளிநாட்டில் இருந்து பணம் வந்து மகிழ்ச்சி தரும்.
ரேவதி: பணியாளர்களுக்கு நல்ல செய்தி வரும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.