ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய சரக்குக் கப்பலை பிரான்ஸ் கைப்பற்றியது
Prathees
3 years ago

மொஸ்கோவிற்கு எதிரான புதிய ஐரோப்பிய ஒன்றிய தடைகளுக்கு இணங்க இன்று ஆங்கிலக் கால்வாயில் பிரான்ஸ் ரஷ்ய சரக்குக் கப்பலை இடைமறித்தது.
சரக்குக் கப்பல் கார்களை ஏற்றிக்கொண்டு, ரூவெனில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிச் சென்றது.
இருப்பினும், பிரெஞ்சு கடல் பொலிசார் கப்பலை வடக்கு பிரான்சில் உள்ள Boulogne-sur-Mer துறைமுகத்திற்கு திருப்பிவிட்டனர்.
இது "தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் பட்டியலில் உள்ள ரஷ்ய நிறுவனத்தைச் சேர்ந்தது என்று சந்தேகிக்கப்படுகிறது"
127 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் "பால்டிக் லீடர்" என்று அழைக்கப்படுகிறது.
பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகம் உடனடியாக பிரெஞ்சு அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தியjhf ரஷ்ய RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது



