ரஷ்ய அரசு ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்துக்கு கட்டுப்பாடு:மெட்டா நிறுவனம்..

Keerthi
2 years ago
ரஷ்ய அரசு ஊடகத்தின் பேஸ்புக் பக்கத்துக்கு கட்டுப்பாடு:மெட்டா நிறுவனம்..

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்த நிலையில், ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மெட்டா நிறுவனம்.

உக்ரைன் ரஷ்யா போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு தரப்பிலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன.

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்த நாடுகள் மீதும் ரஷ்யா பொருளாதார தடையை விதித்துள்ளது.

கீவ்வை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யா.. ஏவுகணையால் சரிந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்! பதைபதைப்பு!

உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மெட்டா நிறுவனம். ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்யவும் மானிடைஸ் செய்யவும் மெட்டா நிறுவனம் தடைவிதிக்கப்பட்டுள்ளது

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா(Meta Platform Inc.,) ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஊடகங்களைத் தடை செய்வதாக சனிக்கிழமை அறிவித்தது. பேஸ்புக் பக்கத்தில் இருந்து பணம் பெறவும், விளம்பரம் செய்யவும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. இதை மெட்டா நிறுவனம் வெளிப்படையாக அறிவித்தது. அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்திருக்கும் நேரத்தில் பேஸ்புக்கும் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளது.

மெட்டாவின் திடீர் தடைக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யாவின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர், ரோஸ்கோம்நாட்ஸோர், "ரஷ்ய குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை" மெட்டா குறைக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். அக்டோபர் 2020 முதல் ஒட்டுமொத்தமாக 23 பேஸ்புக் பக்கங்களில் தணிக்கை செய்திருக்கிறது மெட்டா நிறுவனம் என ரஷ்யா சாடியது.

மெட்டா இதுவரை நான்கு ரஷ்ய ஊடகங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளை கட்டுப்படுத்தி இருக்கிறது. Zvezda TV சேனல், RIA நோவோஸ்டி செய்தி நிறுவனம் மற்றும் Lenta.ru மற்றும் Gazeta.ru இணைய தளத்தின் பேஸ்புக் பக்கத்தை மெட்டா நிறுவனம் கட்டுப்படுத்தி இருக்கிறது என ரஷ்யாவின் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் ரோஸ்கோம்நாட்ஸர் கூறியுள்ளார்.

ரஷ்ய ஊடகங்கள் தொடர்பான இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஃபெடரல் சட்ட எண். 272-FZ ந் படி தடைசெய்யப்பட்டுள்ளதாக மெட்ட பதிலளித்துள்ளது. ரஷ்ய ஊடகங்கள் மீது எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரஷ்யா மெட்டாவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.அதோடு இந்த தடையை நீக்குமாறும் ரஷ்யா கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் இதற்கு மெட்டா நேரடியாக பதிலளிக்கவில்லை. இதனால் மெட்டா தங்களது கோரிக்கைகளை 'புறக்கணித்துவிட்டது' என்று ரஷ்யா கூறுகிறது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு பதிலளித்துள்ளார். மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் கிளெக். அவர், ''பேஸ்புக் நிறுவனம் ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்துவிட்டது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் ஊடகங்களில் இருக்கும் 'உண்மை செய்தி' என்ற டேக்லைனை நீக்கச் சொன்னது, அதை பேஸ்புக் மறுத்துவிட்டது'' என்று நிக் கிளக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்